க.கிஷாந்தன்-
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. ரயிலின் பயணிகள் பெட்டி ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
கொட்டகலை – அட்டன் ஆகிய புகையிரத நிலையத்திற்கிடையில் 110 என்ற கட்டைப்பகுதியில் 05.09.2016 அன்று 1.45 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.