ஏறாவூர் நிருபர் : ஏ.எம்.றிகாஸ்-
ஏறாவூர் -இரட்டைக்கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆறுபேரும் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் 23.09.2016 ஆஜர்செய்யப்பட்டதையடுத்து நீதிமன்ற நீதிபதி எம்ஐஎம் றிஸ்வி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொலிஸார் சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து விஞ்ஞான ரீதியிலான உறுதிப்பாட்டிற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்புமாறு நிதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
ஏறாவூர்- முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த 11.09.2016 ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை பொல்லால் அடித்து கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இச்சந்தேக நபர்கள் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டவேளை நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.