சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதாக சகலதுறை ஆட்டக்காரர் தில்ஹார லொகுஹெட்டிகே நேற்று அறிவித்துள்ளார்.
தனது இந்த தீர்மானத்திற்கு முழுக் காரணம் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்எஞ்சலோ மத்தியூஸ் தான் என நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியினுள் இணைவதற்கு அணியின் தலைவர் எஞ்சலோ மத்தியூஸ் தனக்கு எந்த வாய்ப்பையும் ஏற்படுத்தி தரவில்லை எனவும், 2013ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடசென்றிருந்தேன். ஆனால் எனக்கு ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவு குழுவின் உறுப்பினர் பிரமோதய விக்கிரமசிங்கவிடம் கேட்டபோது, மத்தியூஸ் நீங்கள் விளையாடுவதை விரும்பவில்லைஎன அவர் தெரிவித்திருந்தார் என தில்ஹார குறிப்பிட்டுள்ளார்.