க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லிந்துலை - கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் 09.09.2016 அன்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் மின்மானியும், வீட்டின் ஒருபுற பகுதியும் எரிந்துள்ளது.
எனினும் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கும், லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும், மின்சார சபையினருக்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.