பௌத்த மத முற்போக்கு சிந்தனையாளரான அனாகரிக தர்மபால
சிங்களவர்களே கிளர்தெழுங்கள் என்று அன்று கூறினார் எனவும், இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருந்து சகல இன மக்களையும் விழித்து இலங்கையர்களே விழித்தெழுங்கள் என அறைகூவல் விடுக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சற்று முன்னர் நடந்து முடிந்த, ஸ்ரீ ல.சு.கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.
இக்கட்சியின் சிலருக்கு பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் அமர்வதற்கு அனுமதியளித்தோம். தற்பொழுது அவர்களிடம் கட்சியை உடைத்து புதிய கட்சியை உருவாக்க முன்வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சகல இனங்களும், சமயத்தவர்களும் இணைந்த மகிழ்ச்சியாக வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம். சலகரும் ஒன்றாக இணையும் போதே சர்வதேச நெருக்கடிகளிலிருந்து நாம் எம்மை விடுவித்துக் கொள்ள முடியும். நாடு 9 லட்சம் கோடி கடன் சுமையுடன் காணப்படுகின்றது எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.