ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்-
தேசிய வீடமைம்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முயற்சியில் கல்முனை பிரதேச வறிய குடும்பங்களுக்குசீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (10)சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஏ.ராஜதுரை, வீடமைப்பு அதிகார சபைகல்முனைக் காரியாலய முகாமையாளர் ஏ.எம்.இப்றாகிம், சமுர்த்தி தலைமைக் காரியாலயமுகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர்ஏ. பாவா, எம்.றினோஸ், கே.எல்.தௌபீக் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் மக்களுக்கு சீமெந்து பொதிகளை வழங்கி வைத்தார். கல்முனை பிரதேசத்திலுள்ள 60 வறிய குடும்பங்களுக்கு சீமெந்து பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.