நாம் தான் மிகச் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் - மஹிந்த

ட்சியில் தற்பொழுதுள்ளவர்களை விடவும், நாம் தான் மிகச் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள். பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து கட்சியை அமைத்தவர் எனது தந்தை டீ.ஏ.ராஜபக்ஷ ஆவார். இதனை இன்று மறைக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அனுராதபுரத்திலுள்ள முக்கிய விகாரைகளில் சமயக் கிரியைகளை நிறைவு செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

எம்முடன் உள்ளவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டதன் பின்னர் நாம் எங்கே செல்வது? எம்முடன் உள்ளவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்துக்கு செல்வதில்லையென தீர்மானம் எடுத்ததன் பின்னர், எனக்கு அதனை உடைத்துக் கொண்டு கட்சியின் கூட்டத்துக்கு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -