வட, கிழக்கை இணைத்து அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கூட்டமைப்பு முயற்ச்சி - அதாஉல்லா

எம்.ஜே.எம்.சஜீத்-
டக்கையும், கிழக்கையும் இணைத்து பாராளுமன்றத்திற்குசமமானதொரு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்காக சிங்களப் பேரினவாதிகள் விரும்புகின்றவற்றை வடகிழக்குக்கு வெளியே செய்துகொடுப்பதற்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆயத்தமாகிவிட்டதாக தேசியகாங்கிரசின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமானஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிராகநடத்தப்பட்டுவரும் ”சுதந்திர கிழக்கு” பிரகடனப்பொதுக்கூட்டம் டாக்டர் வை.எஸ்.எம் சியா தலைமையில்வெள்ளிக்கிழமை (9) மூதூர் பிரதான வீதியில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் குறிப்பாக தமிழ் அரசியல்தலைவர்கள் வடக்கையும் கிழக்கையையும் இணைக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டிலேதான் உள்ளனர். இந்தநாட்டின் பாராளுமன்றம் அவர்களுக்கு ஒருவிடயமல்லவடக்கையும், கிழக்கையும் இணைத்து பாராளுமன்றத்திற்கு சமமானதொரு அதிகாரத்தை தாங்கள்எடுத்துக்கொண்டால் வட, கிழக்குக்கு வெளியே வாழ்கின்றதமிழர்களைப் பற்றியோ அல்லது முஸ்லிம்களைப் பற்றியோ பாராளுமன்றத்தைப் பற்றியோ அவர்கள் யோசிக்கவில்லை. தொகுதி ரீதியான பிரச்சினைகள் வந்தபோது அதில் அவர்கள்தலையிடவில்லை ஆனால் அவர்கள் சிங்களப்பேரினவாதிகளுக்கு எதுவிருப்பமோ அதனை வடகிழக்குக்கு வெளியில் செய்து கொடுப்பதற்கும் ஆயத்தமாகி விட்டார்கள்.

இன்று அரசாங்கம் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பை மாற்றுவதற்கான ஒரு சபையாகவும், தேர்தல்முறையை மாற்றுவதற்காக ஒரு சபையாகவும்மாற்றியிருக்கின்றார்கள். குறிப்பாக இந்த சூழ்நிலையில்தான் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இக்காலப்பகுதியிலேதான் முஸ்லிம் அரசியல்தலைமைகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

பாராளுமன்றத்திலே அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்றஉறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என நீங்கள் என்னிவிடலாம்நீங்கள் விளங்குவதற்காக நோர்வேயினுடை ஒப்பந்தத்தை உங்களுக்கு விளக்கமாகக் கூறினேன் அதே நோர்வேதான் இப்போதும் இருக்கின்றது நோர்வேக்காரர்கள் தான்பிரதமருடைய ஆலோசகர்களாகவும் இருக்கின்றார்கள். 

இவர்களினால் இனத்தீர்வு தொடர்பான விடயம் மாத்திரமல்லஅதற்கு முதல் இன்னுமொரு முக்கியமான விடயமும்நடக்கப்போகிறது குறிப்பாக தொகுதி ரீதியான தேர்தல்முறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கும்நோர்வேக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள். பெரும்பான்மைகட்சிகள் இரண்டும் தங்களுடைய கட்சிகளைநிலை நிறுத்துவதற்கும் பெரும்பான்மை மக்களிலிருந்து அதிகமானவர்கள் பாராளுமன்றம் செல்வதற்குமான ஏற்பாடுகளைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தொகுதிகளைக் குறைத்து அங்கத்தவர்களை வேறுவிதமாகக்கூட்டி வட கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின்பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்கின்ற ஏற்பாடுகள்தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. சிறுபான்மைமக்களாகிய நாங்கள் கேட்கின்றோம் ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டாம் சிறுபான்மை மக்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்கின்ற போது ஜனாதிபதியைமாற்றுவதற்கும் ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கும் முடியும்என்கின்ற அதிகாரம் எங்களிடத்திலே இருக்க வேண்டும். 

அதுதான் சிறுபான்மை சமூகத்திற்கிருக்கின்ற பாரியதொருஅதிகாரமாகும் அந்த அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டாம். இது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும்தேவைப்பட்டது. அதே போன்றுதான் தொகுதிகளை குறைக்கமுற்பட வேண்டாம் வட, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவத்தை பெறுகின்ற விடயத்திற்கும் தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்.

குறிப்பாக முழு நாடும் ஒரு பார்வையில் பார்க்கின்றபோதுவடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இலங்கையில்வாழுகின்ற முஸ்லிம்களுள் 1/3 பகுதியினர்தான்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணம் பிரியவேண்டும் என்று நாங்கள் மிகத்தெளிவாக சொன்னதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும். வடகிழக்குக்கு வெளியேவாழுகின்ற 2/3பகுதி முஸ்லிம் மக்களை நாங்கள் பாதுகாக்கவேண்டும். அது மிக முக்கியமான விடயமாகும்.

வட,கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இன்றும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இனவாதம், பொதுபலசேனா என்று எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. இவைகளெல்லாம் யார் உருவாக்கினார்கள் என்பது ஒரு பிரச்சினை அந்த மக்களைப்பாதுகாப்பதற்காகவே கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும்என்று கூறினோம். 

இந்த நாட்டிலே பொதுபலசேனா என்றொரு இயக்கம்முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஏன் ஏசிக்கொண்டிருக்கின்றார்கள்சிங்கள மக்களையும், பௌத்த குருமார்களையும் கொன்றுகுவித்த விடுதலைப்புலிகளுக்கு ஏன் ஏசவில்லை அண்மையிலே யாழ்பானத்திலே பௌத்த சிலை உடைக்கப்பட்ட போதும்பொதுபலசேனா பேசவில்லை என்றால் ஏன் நாம் இதனைப்பற்றி சிந்திப்பதில்லை. இவர்கள் முஸ்லிம்களைமாத்திரம் இலக்கு வைத்து தாக்குவது ஏன் இந்த இடத்திலேதான் நாங்கள் டயஸ்போரா மற்றும் நோர்வையிலே சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக இதனை ஏன் கூறுகின்றேன் என்றால் யாரும்களத்திலே இறங்கி நாடுகளைப் பிடிப்பதில்லை அமெரிக்காவும்நேரடியாக சதாம் உசையினைப் பிடிக்கவில்லை ,லிபியாவிலும் கடாபியை பிடிக்கவில்லை..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -