காணாமல் போன வர்த்தகர் நஸ்ரின் தொடர்பில் அவருடன் வந்த முகம்மட் லெப்பை முறைப்பாடு..!

அப்துல்சலாம் யாசீம்-
லங்கை வங்கியின் ஏல விற்பனை திருகோணமலையில் நேற்று (04) நடைபெற்ற போது ஏல விற்பனையில் நகைகளை வாங்குவதற்காக வந்த நபரை காணவில்லையென திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர் களுத்தறை மாவட்டம் அட்டுலுகம-மாவத்த பகுதியைச்சேர்ந்த எம்.எச்.நஸ்ரின் (36 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலை இலங்கை வங்கிக்கு ஏல விற்பனையில் நகைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த வேளை தண்ணீர் குடிப்பதற்காக வங்கிக்கு வௌியே சென்றவரை காணவில்லையெனவும் அவரிடம் 20 இலச்சம் ரூபாய் பணம் கைவசம் இருந்ததாகவும் அவருடன் வருகை தந்த முகம்மட் லெப்பை முஹிதீன் பிர்தௌஸ் என்பவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறைப்பாடு தொடர்பாக வங்கியில் பொறுத்தப்பட்டிருந்த சீசீடி கெமராவை சோதனை செய்துள்ளதாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

POLICE 026-2222227 - 0777777712
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -