ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனைபிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று (02) வெள்ளிக்கிழமைஇடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதிகயாக கலந்து கொண்டுகழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.உமர் அலி, எம்.எம்.முஸ்தபா, திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இராஜதுறை, ஓய்வு பெற்ற மாவட்டவிளையாட்டு அதிகாரியும், பிரதி அமைச்சரின் ஆலோசகருமான எம்.ஏ.நபார், பிரதிஅமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, கே.எல்.தௌபீக், எம்.றினோஸ்உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 50 விளையாட்டுக் கழகங்களுக்குவிளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.