இலங்கை கூடைப்பந்து சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்து சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் சி பிரிவில் கலந்து கொண்ட மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியின் 19 வயதின் கீழ் அணி அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
முதல் சுற்றில் விதுர கல்லூரியுடன் போட்டியிட்டு 20-29 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியதுடன் இரண்டாம் சுற்றில் ஹோலி கிராஸ் கல்லூரியுடன் போட்டியிட்டு 28-42 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது.
பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் அரை இறுதி போட்டியில் 21-40 என்ற புள்ளி அடிப்படையில் கொழும்பு வெஸ்லி கல்லூரியை தோற்கடித்தது. இறுதியில் சி பிரிவில் மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியின் 19 வயதின் கீழ் அணி மாத்தறை ராகுல கல்லூரி உடன் மோதி 29- 47 என்ற புள்ளிகள் அடிப்படையில் மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரி வெற்றியீட்டியது.
இதேவேளை கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக்கொண்ட மாவனல்லை சாஹிரா கல்லூரி 19 வயதின் கீழ் அணியை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி அதிபர் ஜவாட் அவர்களின் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது. மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரி அணைத்து விதமான விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கும் ஒரு கல்லூரி என்பது குறுப்பிடத்தக்கது.