சப்ராஸ் அபூபக்கர் -
இஸ்லாமிய பல்சுவை சஞ்சிகையான #பிறைநிலா" சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கும் இலவச ஒருநாள் ஊடகச் செயலமர்வு எதிர்வரும் (01-10-2016) சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நாரம்மல, சியம்பளாகஸ்கொடுவயில் நடைபெறவுள்ளது. ஊடகத்துறையில் அனுபவமுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களைக் கொண்டு இந்த செயலமர்வு நடாத்தப்படவுள்ளது.
- செய்தியாளராக,
- தொகுப்பாளராக,
- தயாரிப்பாளராக,
- வர்ணணையாளராக,
- புகைப்படக் கலைஞராக.
என கலைத்துறையில் தடம் பதிக்க விரும்புவோர் அனைவரும் இந்த இலவச செயலமர்வில் கலந்து பயன் பெறலாம்.
(பேச்சு, கவிதை, பாடல் போன்ற துறைகளுக்கான சிறப்பு வழிகாட்டல்)
மேலதிகத் தகவல்களுக்கும்,
தொடர்புகளுக்கும் - 077-3147675