கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகப் பொதுச் செயலாளாரும்; சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களுடைய செல்வப் புதல்வர் சாஜித் கபூர் (லண்டன் பல்கலைக்கழத்தில் M.B.A சிறப்புப் பட்டம் பெற்றவர்) இவருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈரான் வெளிநாட்டு தூதுவராக கடமைப்புரிந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் அவர்களின் ஒன்று விட்ட சகோதரர் கிருலபனையைச் சேர்ந்த எம்.எம்.இம்டியாஸ் அவர்களின் செல்வப் புதல்வியான சாஜிதா (சென்-பிரிஜட்ஸ் கொன்வன்ட்- கொழும்பு-7) அவர்களுக்குமான திருமண வைபவம் கொழும்பில் மிகவும் கோலாகரமாக நடைபெற்றது.
இவ் வைபவம் கிருலபனை ஜும்மா பள்ளி வாசலில் நடைபெற்ற போது அந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஜனாப் ஹாபீஸ் நசீர் அகமட் அவர்களும், திருமண வைபவத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் அதைத் தொடர்ந்து மறுநாள் இடம்பெற்ற வலீமா நிகழ்வுக்கு சுகாதார பிரதி அமைச்சர் ஜனாப் பைசல் காசிம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேற்படி மூன்று முக்கிய நிகழ்வுகளிலும் ஏராளமான அரசியல் வாதிகள் முன்னாள் ஃ இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், சிரேஷ;ட சட்டத்தரணிகள், உள்ளூர் ஆட்சி சபை முன்னாள் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள், கொழும்பில் உள்ள பிரபல தொழில்அதிபர்கள், பத்திகையாளர்கள், உலமாக்கள், உயர் உத்தியோகஸ்தர்கள், உறவினர்கள், அவர்களின் குடும்ப நண்பர்கள் உட்பட ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் என நிறைந்தளவில் காணப்பட்டார்கள். அப்போது இன்றைய அரசியல் நிலைபாடுகளைப்பற்றி பலரும் பலவிதமாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்ததனையும் நாம் காணக்கூடியதாக இருந்தது இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாகும்.
மறுநாள் புதுமனத் தம்பதிகளின் வீடு தேடி விசேடமாக விஜயம் செய்த முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் துணைவியார் மணமக்களை மனமார வாழ்த்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி வைபவங்கள் கடந்தவாரம் கொழும்பு தலைநகரில் நடைபெற்ற ஏனைய நிகழ்வுகளில் இதுவும் ஒரு முக்கியமான வைபவமாக பழைய புதிய அரசியல் வாதிகளுடன் காங்கிரஸ் கட்சியாளர்களும் கலந்து கொணட ஒரு சிறப்பான ஒன்று கூடலாக இந்நிகழ்வு அமைந்திருந்ததாக பலரும் தமது அப்பிப்பிராயங்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டார்கள்.