காணாமல்போன ஆசிரியை சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம்

மூன்று பிள்ளைகளின் தாயான பாடசாலை ஆசிரியை தேவாலய காணியிலுள்ள கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையிலேயே ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரத்தில் இடம்பெற்றுள்ளது. 

மரணமானவர் ஸ்கந்தபுரம் இல. 1 அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றும் ஜெயரத்தினம் ஜெயவக்சலா (வயது 51) என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை குறித்த ஆசிரியை வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் குறித்த தேவாலய காணியிலுள்ள கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க வந்த இரு மாணவிகள் கிணற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதனைக் கண்டு தேவாலய குருவிற்கு அறிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி க. திருலோமூர்த்தியால் மரணம் தொடர்பான விசாரணை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த மரணம் தற்கொலை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -