எம்.வை.அமீர்-
பிராந்தியத்தில் வசதிகள் குறைந்த பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களின் இலகு செயற்பாட்டுக்கும் தனிநபர்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர்,மின்சாரம்,வாழ்வாதார உதவிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் வழங்குதல் புலமைப்பரிசில்கள் வழங்குதல் என பல்வேறு சமூகநல திட்டங்களை பலவருடங்களாக செயற்படுத்தி வரும் யஹ்யாகான் பௌன்டேசன், 2016-09-14 ஆம் திகதி சாய்ந்தமருதில் உள்ள அதன் காரியாலயத்தில் வைத்து, தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகை பயனாளிகளுக்கு குடிநீரை பெறுவதற்கான காசோலைகளை வழங்கி வைத்தது.
யஹ்யாகான் பௌன்டேசனின் செயலாளர் ஏ.சீ.எம்.றியால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌன்டேசனின் தலைவரும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான ஏ.சி.யஹ்யாகான் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்தார்.