க.கிஷாந்தன்-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் 09 வது கட்ட பேச்சுவார்த்தை 22.09.2016 அன்று நடைபெறவுள்ளதாக கூட்டு ஓப்பந்ததில் கைச்சாத்திடும் தொழில் சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழில் சங்கங்களுக்கும் இடையில் எந்த ஒரு இணக்கப்பாடும் இல்லாமல் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் 22.09.2016 அன்று நடைபெறவுள்ள சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சாதகமாக அமைய வேண்டும் என ழொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 22.09.2016 அன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை நல்ல தீர்வு கிட்டும் என இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
1992 ம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் தனியார் துறைக்கு தோட்டங்களை வழங்கிய காலத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பல போராட்டங்களுக்கு மத்தியில் சம்பள உயர்வு பெற்ற சரித்திரமே பதிவாகியுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 31ம் திகதி கூட்டு ஒப்பந்தம் முடிந்து பல போராட்டங்கள் நடந்த போதிலும் நல்ல தீர்வு கிடைக்காமைக்கு காரனம் என்ன என்பதனை தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க அதிகாரிகள் விளக்கம் கொடுக்கப்படவில்லை இதன் காரணமாக தொழிலாளர் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
எனவே 22.09.2016 அன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியளிக்க தொழில் சங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்கள் கோருகின்றனர்.