காத்தான்குடியில் ”அறபா நோன்பு” திறக்கும் நிகழ்வு..!

எம்.எச்.எம்.அன்வர்-
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் (சி ஐ ஜி) துல்ஹஜ் மாத பிறை 9வது அறபா நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாளமானோர் கலந்துகொண்டதுடன்; இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவினை அஷ்ஷெய்ஹ் எம் டி எம் சப்ரி நளீமி நிகழ்த்தினார்.

அறபா தினத்தில் முஹம்மது நபியவர்களின் இறுதிப்பேருரை அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அதன்படி நாம் இத்தினத்திலிருந்து வாழ திடசங்கட்பம் கொள்ளுமாறு விஷேட சொற்பொழிவாளரால் எடுத்துரைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

வழமைபோன்று இவ்வாறான சுன்னத்தான நோன்பு தினங்களில் இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்து அதிகமானோரை நோன்பு பிடிக்க தூண்டுகோலாக அமையும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் செயற்பாட்டினை பலரும் வரவேற்பதை காணமுடிகின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -