போலி முகவர் கைது..!

அப்துல்சலாம் யாசீம்-
வெளிநாடு செல்வதற்கான போலி முகவர் நிலையமொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் ஒருவரை திருகோணமலை- முள்ளிப்பொத்தானைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (22) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் போலி முகவர் நிலையம் இயங்கிவருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்; திருகோணமலை மாவட்டக் கிளைக்குத் தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து குறித்த பணியகத்தின் திருகோணமலை மாவட்டக் கிளை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியபோது குறித்த முகவர் நிலையத்தைக் கண்டுபிடித்ததுடன் சந்தேக நபரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை-யுனிட் 10யைச்சேர்ந்த நஸூர் என்றழைக்கப்படுகின்ற என்.எம்.ஹனீபா (57 வயது) எனவும் தெரியவருகின்றது. இச்சந்தேக நபரிடமிருந்து 3 கடவுச்சீட்டுகளையும் வீஸா தொடர்பான போலி ஆவணங்களையும் போலி வைத்திய அறிக்கை ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபரை நாளை வெள்ளிக்கிழமை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -