கடந்த நான்காம் திகதி ஒரு கோடி பணத்துடன் மாயமான பண்டாரகம அடுளுகம பிரதேச வர்த்தகர் முகம்மத் நஸ்ரின் நேற்று மாலை யாழில் வைத்து கைதான தகவல்கள் வரை நாம் உங்களுடன் பகிர்ந்து உள்ளோம். இந்நிலையில் இவர் மாயமான பின்னர் ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் இது தொடர்பில் சந்தித்த அனுபவங்களை பார்ப்போம்.
பாமசி ஒன்றினுல் இவர் சென்றதன் பின்னர் எந்த வித தகவலும் இல்லை என்பது தான் இச்சம்பவம் தொடர்பாக இவரின் தந்தை ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவலாகும். காணாமல் போன தினத்தில் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் செயற்பாடுகள் காண்போரை கரைய வைத்தது, கல் நெஞ்சக்காரர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது .. ( வீடியோ)
ஆனால் மறுநாள் அதே ஊடகவியலாளர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்றபோது அவரின் மனைவி வீட்டினுள் ஓடிச்சென்று கதவை தாளிட்டுக் கொண்டார். அன்று மிகவும் சோகமாக இருந்த நஸ்ரினின் தந்தையும் மறுநாள் மிக சாதரணமாக இருந்துள்ளார். இன்று மாலையாகும் முன் என் மகன் வந்து விடுவான் என சாஸ்திரக் காரர்கள் கூறினார்கள் அதனால்தான் தைரியமாக இருப்பதாக ஊடகவியலார்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் சம்பவம் நடந்திருந்தது வேறு மாதிரி..
பொலிஸ் விசாரணையில் முன்னுக்கு பின் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் முக்கியமானது குரிப்பிட்ட வர்த்தகர் நாலாபக்கமும் கடன் வாங்கி உள்ளார். அவ்வாறு கடன் வாங்கி செலுத்த முடியாமல் போனது சுமார் ஒரு கோடி. வீடு கட்ட ஹார்ட் வெயார் ஒன்றில் கடன் வாங்கியதும் சில இலட்சங்கள். இதனை அறிந்த பொலிசார் சூசகமாக செயல்பட்டு அவருடன் திருகோணமலை சென்ற இரு முக்கிய நபர்களை அழைத்து திருகோணமலையில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது தான் கடன் தொல்லையில் இருந்து தப்ப இந்த வியாபாரி நஸ்ரின் யாழ்பாணத்துக்கு தப்பி ஓடியது வெளியாகி உள்ளது. சில நாட்கள் தலைமறைவாக இருந்து பின்னர் பணம் ஒரு கோடி பறித்து செல்லபட்டுள்ளதாக அனைவரையும் நம்பவைத்து கடன் தொல்லையில் இருந்து தப்ப முயற்சித்துள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். நாடே அவர் தொலைந்து போனதை பேசும் வேளை, தான் யாழில் பத்திரமாக இருப்பதை வீட்டுக்கு அழைத்து சொல்லி இருப்பதாகவும் தெரிய வருகிறது.
அதனால்தான் காணமல் போன தினத்திலும், அடுத்த நாளிலும் வீட்டினர் வித்தியாசமாக நடந்துள்ளனர். இவருடன் திருகோணமலை சென்ற இருவரும் இந்த திட்டத்தை அறிந்தவர்கள் என்பது வெளியாகியுள்ளது. இப்படி சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.. நன்றி இணையம்...