இன்று அதாவுல்லா ஏறாவூரில் - சுதந்திர கிழக்கு

கிழக்கு மாகாணம் வட மாகானத்துடன் இணைப்பதை தடுக்குமுகமாக "சுதந்திர கிழக்கு" என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு தெளிவூட்டும் மாபெரும் பொதுக்கூட்டம் ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடாத்த ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம பேச்சாளர்களாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அரசியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர் கலாநிதி. எம் .எஸ் அனீஸ், தேசிய காங்கிரசின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோர் கலந்துகொண்டு விசேட சொற்ப்பொழிவாற்றவுள்ளார்கள் .

மேலும் இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்ச்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பே , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் அவர்களும் இன்னும் பல புத்தி ஜீவிகளும் ,அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாணத்தில் பல பாகங்களிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து சிறப்பிக்க ஆவலாகவுள்ளவுள்ளனர்.எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -