மூதூர் ,கிண்ணியா தள வைத்தியசாலையில் நிலவும் தாதியர் பற்றாக்குறை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசகருமான கௌரவ அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் அவர்களால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ஏ.எல். முஹம்மட் நசீர் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளிற் கிணங்க நேற்றைய தினம் (26) புதிதாக நியமனம் பெற்றவர்களில் இருந்து முறையே மூதூர் தள வைத்தியசாலைக்கு ௦3 தாதியர்களும் , கிண்ணியா தள வைத்தியசாலைக்கு ௦2 தாதியர்களும் நியமிக்கப்பட்ட்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவ் நியமனத்தை அடுத்து ஸ்ரீ.ல.மு காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் அவர்கள் திருகோணமலை மாவட்ட மக்கள் சார்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் A.L.M.நசீர் அவர்களுக்கு நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.