நிந்தவூரில் மாபெரும் அஞ்சலோட்டப் போட்டியும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வும்...!

சுலைமான் றாபி-
விளையாட்டினூடாக அனைவருக்கும் ஆரோக்கியமும் சமாதானமும்" எனும் தொனிப்பொருளில் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நிந்தவூர் நலன்புரிச்ச சபை நடாத்தும் மாபெரும் அஞ்சலோட்ட போட்டியும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வும் நாளை (16) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிந்தவூர் நலன்புரிச்சபையின் விளையாட்டுப் பிரிவு தவிசாளர் ஏ.எம். அன்சார் தெரிவித்தார்.

இவ்விளையாட்டு நிகழ்வில் சைக்கிள் ஓட்டம் , மரதன் ஓட்டம் மற்றும் கிராமத்து பாரம்பரிய கலை நிகழ்வுகளும் போட்டி நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வினுள் உள்ளடங்கப்பட்டுள்ளது.

நாளை ஆரம்பமாகும் இந்நிகழ்வு எதிர்வரும் 18 ம் திகதி வரை இடம்பெற உள்ளது. குறித்த விளையாட்டுப் போட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் விளையாட்டுக் கழக வீரர்களும், போட்டியாளர்களும் பங்குபற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்லாது போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மிகவும் பெறுமதியான பரிசில்களும் பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த நிகழ்வில் பங்கு பற்றி வெற்றி பெறும் வீரர்களுக்கான பின்வரும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

1. சைக்கிள் ஓட்டம் - முதலாம், இரண்டாம் மற்றும் மூண்டாம் இடங்களை பெறும் வீரர்களுக்கு புதிய மௌண்டன் ரக சைக்கிள்களும் 2 தொடக்கம் 10 ம் இடங்களை பெறுகின்ற வீரர்களுக்கு தலா 2000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
2. மரதன் ஓட்டம் - முதலாம் பரிசு - 10000 ரூபா, இரண்டாம் பரிசு 5000 ரூபா, மூன்றாம் பரிசு 3000 ரூபா மற்றும் 4 தொடக்கம் 10 வரையான இடங்களுக்கு தலா 2000 ரூபாவும் வழங்கப்படும். 
3. கயிறு இழுத்தல் போட்டி - முதலாம் பரிசு ரூபா 5000 இரண்டாம் பரிசு ரூபா 3000
4. மெதுவான சைக்கிள் ஓட்டம், வெற்றியாளருக்கு ரூபா 2000
5. மெதுவான மோட்டார் சைக்கிள் ஓட்டம் வெற்றியாளருக்கு ரூபா 2000
6. பின்பக்கமாக ஓடுதல் வெற்றியாளருக்கு ரூபா 2000
7. விநோத உடை - முதலாம் இடம் ரூபா 3000, இரண்டாம் இடம் ரூபா 2000, மூன்றாம் இடம் ரூபா 1000

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டப்போட்டியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் நிந்தவூரின் மிகப்பாரம்பரிய கலைகளுள் ஒன்றான வாழ் வீச்சு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஊரின் இளம் வீர வீராங்கனைகளுக்கு ஒரு வரப்பிரசாதமான வாய்ப்பாக காணப்படுவதாகவும் இதன் மூலம் தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்காட்டும் ஓர் களமாகவும் இது அமையும் என நிந்தவூர் நலன்புரிச்ச சபையின் விளையாட்டுப் பிரிவு தவிசாளர் ஏ.எம். அன்சார் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -