பொதுபல சேனாவினுடைய உருவாக்கம் அதன் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச தரகர்களின் பக்கம் முஸ்லீம்களின் பார்வை திரும்பி இருக்கின்ற இவ்வேளையில் வட கிழக்கை இணைத்து முஸ்லீம்களை அடிமையாக்குகின்ற செயற்பாடுகளையும் அவர்களே முன்னெடுத்திருக்கின்ற நிலையில் மு கா வும் பொதுபல சேனாவினதும் இயக்கம் ஒரிடத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது என்று மக்கள் உணர்ந்து வரும் நிலையில் பொதுபல சேனாவை நம்பினாலும் அதாஉல்லாஹ்வை நம்ப தயாரில்லை என மாகாண சபை உருப்பினர்களை ஒருவர் கூறி இருப்பதானது தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை அப்பாவி முஸ்லிம் மக்களின் வாக்குகளை சர்வதேச மட்டத்தில் திட்ட மிட்டு உண்மையான தலைமைகளை வீழ்த்த நீங்கள் நம்பிய உங்கள் மறை முக பங்குதார்களான பொதுபல சேனாவை நீங்கள் உங்களின் எதிர்கால அரசியல் நலனுக்காக நம்பித்தான் ஆக வேண்டும்.
முஸ்லீம்களை எவ்வேளையும் பொதுபல சேனாவின் பெயரை சொல்லி டயஸ்போரா திட்டத்துக்கு பலியாக்கி விடலாம் என நினைப்பது குறித்து நம் சமுகம் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.
முஸ்லீம்கள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியை நம்பித்தான் வாக்களித்தார்களே தவிர ரணிலையோ ஹக்கீமையோ நம்பி அல்ல
ஏன் என்றால் எம்மை பல தடவை தர்ம சங்கடமான நிலைக்கு பல தடவை இட்டு சென்றிருக்கிறார்கள்.
அதாஉல்லாஹ் வின் கருத்துக்கள் இன்று கிழக்கு மக்கள் உண்மையன உணருகின்ற வேளை பொது பல சேனா எனும் பெயரை மீண்டும் உச்சரிக்க முதலில் வெட்கப்பட வேண்டும் நீங்கள் நல்லாட்சியை உருவாக்கி பொதுபல சேனாவுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற் கொண்டீர்கள்.
மீண்டும் அதாஉல்லாஹ்வின் வருகை குறித்த பயம் சிலரை ஆட் கொள்ள ஆரம்பித்துள்ளதுபொதுபல சேனா வை நீங்கள் நம்பலாம் அதாஉல்லாஹ்வை மக்கள் இனி நம்புவார்கள் என்றார்.