எம்.எம்.ஜபீர்-
சவளக்கடை வீரத்திடல் கிராமத்தில் இன்று நள்ளிரவு உட்புகுந்த காட்டு யானைகள் பிரதேச பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளன.
ஊருக்குள் உட்புகுந்த யானைக் கூட்டம் பல பொதுமக்களின் மதில்கள், கடைகள், நெற்களஞ்சியங்கள், மரவள்ளித் தோட்டம், கரும்புத் தோட்டம், வாழை மரங்கள், வேலிகள் உள்ளிட்ட உடைமைகளையும் தேசப்படுத்தியுள்ளன. இதனால் இப்பிரதேச மக்கள் தினமும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பகல் வேளைகளில் கிட்டங்கி நானல் பிரதேசத்தில் ஒழிந்து இருக்கும் யானைகள் இரவு வேளையானதும் பிரதேசத்துலுள்ள கிராமங்களுக்குள் உட்புகுந்து வருவதானால் மக்கள் விழித்திருந்து அச்சதுடனேயே இரவு பொழுதை கழிக்க வேண்டியுள்ளது.
நள்ளிரவு வேளைகளில் கிராமத்தினுள் வந்த யானைகளை அதிகாலை 4.00 மணியலவில் பிரதேச மக்கள் பட்டாசு கொழுத்தி தீ வைத்து விரட்டினர்.