விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் 'ஏ' தரச் சித்தி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-
டந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் மயில்வாகனம்சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் 'ஏ' தரச் சித்தியினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல்இடத்தை பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும்நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சுபாந்திர ராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்றோ அமைப்பின் ஸ்தாபகத்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மடிகணினியை வழங்கிவைத்தார்.  

இந்நிகழ்வில் கல்முனை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.அப்துல் றஹீம், மெஸ்ரோ அமைப்பின் தலைவர்சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல், செயலாளர் சட்டத்தரணி எம்.சுல்பி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்நௌபர் ஏ. பாவா, கார்மேல் பற்றிமா கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சாதனையாளரான மாணவன் மயில்வாகனம் சாறுஜனை பாராட்டி கொளரவிப்பதன் மூலம் குறித்த மாணவனை இன்னும் பல சாதனைகளை புரிவதற்கு தூண்டுதலாக அமைவதோடு ஏனைய மாணவர்களையும்சாதனையாளர்களாக மாறுவதற்கு வழிவகுக்கும் வகையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தானாகமுன்வந்து குறிந்த மாணவனுக்கு மடிகணினி வழங்கி வைத்தார்.

இதன்போது சாதனை மாணவன் உரையாற்றுகையில், வெற்றிக்கு பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றிதெரிவித்ததோடு தன்னை பாராட்டி கௌரவித்து தனது மேற்படிப்பினை சிறந்த முறையில் முன்னெடுத்துச்செல்வதற்கு உதவியாக மடி கணினியினை வழங்கி வைத்த மெஸ்றோ அமைப்புக்கும் அதன் ஸ்தாபகத் தலைவரும்,விளையாட்டுத்துறை பிரிதி அமைச்சருமான ஹரீஸ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்ததோடு அவரின் பணிகள்தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -