கேணிநகர் கிராமத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விஜயம்..!

ஹைதர் அலி -
ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் புனானை கிழக்கு 211B, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கேணிநகர் கிராமத்திற்கு 2016.09.18ஆந்திகதி மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் கேணிநகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பின் பேரில் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவரும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வானது கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அப்துல் ஹமீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு, கேணிநகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் அவர்கள் வாழும் வீடுகள் மற்றும் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் உடைந்த நிலையில் காணப்படும் கிணறுகள் என்பனவற்றை நேரில்சென்றும் பார்வையிட்டார். 

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...

ஒரு மனிதன் இன்னொரு சகோதரனுடைய பிரச்சினைகளை இன்னொரு மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் வெறுமனே தனி மனிதனாக வாழ்ந்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறமுடியாது.

கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அப்துல் ஹமீட் மற்றும் உறுப்பினர் ஹூசைன் ஆகியோருடன் இக்கிராமத்தை பார்வையிட சென்றபோது இங்கு வாழுகின்ற மக்களின் வீடுகளில் ஒன்றினை பார்வையிட்டபோது தகரத்தினாலான வீடொன்றில் ஒரு நபர் வாழ்ந்து வருகின்றார் கடுமையான வெப்பம் நிலவுகின்ற இக்காலப்பகுதியில் இவ்வாறான வீடுகளிலும் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதனை பார்க்கும்போது மனவேதனையளிக்கின்றது.

இங்கு என்னிடம் வீதி பிரச்சினை, இங்குள்ள காணிகளுக்கு உறுதிப்பத்திரம் இல்லாத நிலைமை, வாழ்வாதார உதவிகள் மற்றும் இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்புக்கள் என பலதரப்பட்ட மக்கள் பிரச்சினைகளை இன்று கேணிநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அப்துல் ஹமீட் அவர்கள் என்னிடம் முன்வைத்துள்ளார். இவை அனைத்தையும் நான் உடனே செய்துவருவேன் என்று தங்களுக்கு வாக்குறுதியளித்தால் அது அனைத்தும் பொய்யான வாக்குறுதியாகவே போய்விடும். எனவே என்னால் என்னென்ன விடயங்களை செய்துதர இயலுமோ அவ்வாறான விடயங்களை இன்ஷாஅல்லாஹ் பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நெருங்குகின்ற காலத்தில் மாத்திரம் மக்கள் குறைகளை கேட்டறிந்து தேர்தலின் பிற்பாடு வெற்றி பெற்றபின் செய்துதருவதாக வாக்குறுதியளிக்கும் பொய்யான அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும். நீங்கள் எங்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கோ அல்லது மாகாண சபைக்கோ அனுப்புகின்றீர்கள் என்றால் அது உங்களுடைய பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென்ற ஒரே எண்ணத்திலாகும். 

மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் நான் இவ்வாறான கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படைத்தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் நடைபெறுகின்ற வீட்டுத்திட்டத்திலும் உண்மையான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொறு முறையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோளை விடுத்துவருகின்றேன். அதில் இம்முறை நடைபெற்ற கூட்டத்தில் இதுவிடயமாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க வீட்டுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை வழங்குமாறு என்னிடம் கோரியுள்ளார்கள். என தனதுரையில் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைப்பாடாக காணப்படுகின்ற குடிநீர் போதாமைனால் மிகவும் சிரமப்படுவதாகவும் இக்கிராமத்தில் வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்ட நீர்த்தாங்கிகள் மக்கள் பாவனைக்கு போதாமையாக இருப்பதாக மாகாண சபை உறுப்பினரிடம் பொதுமக்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனை கருத்திற்கொண்டு உடனடியாக வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மேலதிகமாக இன்னும் இரண்டு தண்ணீர் தாங்கிகளை இம்மக்களின் நலன்கருதி வைக்குமாறு மாகாண சபை உறுப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை நிவர்த்தி செய்து கொடுப்பதாக பிரதேச சபை செயலாளர் வாக்குறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவரும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ்.ஹமீட், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ.ஹைதர் அலி, கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -