தென் கொரியா பரலோக கலாசார நிகழ்வில் இலங்கை உலமாக் கட்சி முபாரக் மஜீட் -படங்கள்






தென் கொரியாவை தளமாகக்கொண்ட பரலோக கலாசாரம் மற்றும் உலக சமாதானத்துக்கான அமைப்பின் சர்வதேச சமயத்தலைவர்களின் மாநாடு தென் கொரிய தலைநகர் சியோலில் கடந்த 17ந்திகதி முதல் நடந்து கொண்டிருக்கின்றது. 170 நாடுகளைச்சேர்ந்த உலகின் பல முக்கிய சமயங்களின் சமயத்தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து பௌத்த மதத்தை பிரதிநிதித்துவ படுத்தி இத்தபான தம்மாலங்கார தேரரும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதும் கலந்து கொள்கின்றனர்.

உலகம் முழுவதும் யுத்தம் நீங்கி சமாதானம் எற்பட வேண்டுமென்பதற்காக மேற்படி அமைப்பு பல முயற்சிகளையும்; நடவடிக்கைகளையும் அதன் தலைவர் திரு. லீ அவர்களின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் வழி காட்டலின் கீழ் செயற்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் சர்வதேச மாநாடு கடந்த 2014ல் நடைபெற்றதற்குப்பின் இந்த வருடம் வெகு விமர்சையாக நடை பெறுகிறது. 

இந்த மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் சியோல் ஒலிம்பிக் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் மத்தியில் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சுகல மதங்களும் சகல இனங்களும் சம உரிமை பெற்று சமாதானமாய் செயற்பட வேண்டும் என்ற இலக்கைக்கொண்டு மேற்படி அமைப்பு சர்வதேச ரீதியாக 170 நாடுகளில் கிளைகளை ஏற்படுத்தி செயற்படுகிறது. மேற்படி மாநாட்டில் உலமா கட்சித்தலைவர் கலந்து கொள்வதன் மூலம் இலங்கையின் உலமாக்கட்சிக்கென சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததாகவே அரசியல் அவதானிகளால் கருத்தக் கொள்ளப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -