ஒரு தாயை மிக மோசமாக வார்த்தை பிரயோகத்தால் சமுக வலைத்தளங்களில் பதிவிட்ட தவம் இறைவனிடத்திலும் குறித்த தாயின் உறவுகளிடத்திலும் மன்னிப்பு கோரி மீள வேண்டும்
இல்லையென்றால் அந்த தாயை ஏற்கனவே இவ்வாறு மோசமாக வார்த்தைகள் கொண்டு பேசிய இருவரும் தங்களது அரசியல் இருப்பை இழந்திருப்பது போல் இழக்க வேண்டி வரும்அமைச்சர் அதாஉல்லா கல்முனை ஏறாவூர் கூட்டத்தில் மறைந்த தலைவரின் மரணத்தின் போது அக்கரைப்பற்றில் ஒரு சில தாய்மார் புரியாணி ஆக்கி எங்களுடைய பிள்ளைகளுக்கு இப்போது தான் விமோசனம் என்று கூறினர்
ஆனால் மாகாண சபை உறுப்பினர் தவம் அதை அவர் அளவான தொப்பியாக அணிந்து கொண்டார்
இறைவன் ஆயிசா நாயகி விடயத்தில் உலக மக்களை எச்சரித்த விடயத்தை தவம் அறிந்திருக்க வேண்டும்
அந்த தாய் இந்த ஊருக்கு செய்த சேவைகள் தொடர்பில் நான் பேசவில்லை
அந்த தாய் அதாஉல்லாஹ் அமைச்சரின் தாயாக பார்க்க வில்லை
சாதாரண ஒருவரின் தாயானாலும் அந்த வார்த்தை உம்மால் பாவிக்க முடியாது
இந்த அநாகரிகமான அரசியலைதான் நீங்கள் தலைவர் மரணித்த வேளையிலும் அரங்கேற்றினீர்
இன்னும் அப்போதைய பிரதிதவிசாளர் உவைஸ் அந்த வேளையில் உங்களுக்கெதிராக ஏன் தலைவர் மரணித்த வேளை வெடில் சுட்டீர்கள் எனக் கேட்டு துண்டுபிரசுரம் வெளியிட்ட வேளை அவரை நீங்கள் ஸம்ஸம் பாமஸிக்கு முன் வைத்து தாக்கியதை இந்த ஊர் பார்த்தது நானும் பார்த்தேன்
நீங்கள் வெள்ளை கொடி கட்டீனீர்கள் தலைவருக்காதரவாக பேசினீர் எப்போது பேரியல் அஷ்ரப் பை அன்னையாக்கி உங்களுடைய அரசியல் ஞானியின் தேசிய பட்டியலை உறுதிப்படுத்திய பின்னர்தான்
தலைவர் அஷ்ரப் அவர்களின் சவாலை நிலைபெறச்செய்த அதாஉல்லாஹ் இவ்வாறுதான் அந்த பிரதேச சபை தேர்தல் நடந்தது
மறைந்த தலைவர் அஷ்ரப் சொன்னார் அம்பாரை கரையோர பிரதேச சபைகளில் ஒன்றை இழந்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்வதாக
பிரதானமாக அக்கரைப்பற்று சேகு இஸ்ஸதீன் அவர்களுடைய பிளவால் கொதித்தெழுந்த வேளை
ஆனால் தனியொரு மனிதனாக இருந்து அக்கரைப்பற்று பிரதேச சபை யை அதாஉல்லாஹ் வெற்றியீட்டி காட்டினார்
ஆனால் பொத்துவிலும் நிந்தவூர் காலை வாரியது
அப்போது தலைவரின் சவாலை வென்றெடுத்த அதாஉல்லாஹ் வை இன்று என்னல்லாம் பேசுகிறீர்
தலைவரை வரமுடியால் எத்தனை வழிமறிப்புகள்
குழிபறிப்புகள்
இவை யெல்லாம் பேசி விட்டு இன்று உண்மை தலைவரின் தியாகத்தை உணர்ந்து நன்றாக பேசுவது அவர் உண்மையான தலைவர் என்பதன் அடையாளம்
உங்களுடைய தாயை யாரும் இவ்வாறு பேசுவதை ஏற்க முடியுமா?
நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் இவ்வாறான அநாகரிக அரசியலை அறிமுகம் செய்ய வேண்டாம் தவம்
இவ்வாறு பேசுவதை கூட இருப்போரும் ரசிக்கலாம் ஆனால் வாக்களிக்க மாட்டார்கள் தவம் தெளபா செய்து மீளுங்கள்
உங்களின் அரசியலை பயணத்தை முடக்கி கொள்ள வேண்டாம்
வரலாற்றில் அந்த தாயை தூற்றியோரை அவர்களின் அரசியல் இருப்பை அவதானித்து மீண்டு கொள்ளுங்கள்