சிறைச்சாலைக்குள்ளும் துமிந்த சில்வாவின் விளையாட்டு..!

ரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உடற்பயிற்சிக்கான நேரத்தின் போது, சக கைதிகளுடன் இணைந்து, கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், மரணதண்டனை தீர்ப்புக்குள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொழும்பு - வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, யின் சீ-3 அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை, பீ-3 அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதேவேளை, நேற்று சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, கைதிகள் அணிய வேண்டிய ஆடையை, சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கி, அவரது சிறைக்கூடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், அவர் அந்தச் சிறைக்கூடத்துக்குச் செல்லாது, நேரடியாக சிறைச்சாலைக் கண்காணிப்பாளரின் அலுவலகத்துக்கே சென்றுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரோ அல்லது வேறு எந்தக் கைதியுமோ, சிறைச்சாலைக்குள் வேறு எந்த இடத்துக்கும் செல்ல அனுமதியில்லை. அவ்வாறு சென்றால், அது பாரிய குற்றமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், சிறைச்சாலைக் கண்காணிப்பாளரின் அறைக்குச் சென்றுள்ள துமிந்த சில்வா, சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னரே வெளியே வந்துள்ளார் என்றும், அதன் பின்னரே அவர், தனது சிறைக்கூடத்துக்குச் சென்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள துமிந்தவினால் அனுமதி கோரப்பட்ட போதும், சிறைச்சாலை பிரதானி அதற்கு அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -