காரில் சார்ஜ் போட்ட போன் வெடித்தில் முழுமையாக எரிந்த கார்..!

கார் ஆச­னத்தில் மின்­னேற்­றப்­பட்டுக் கொண்­டி­ருந்த கைய­டக்­கத்­தொ­லை­பேசி வெடித்­ததால் அந்தக் கார் முழு­மை­யாக தீப்­பற்றி எரிந்து கரு­கிய விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் போர்ட் சென். லூசி எனும் இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

பிர­பல தென் கொரிய பல்­தே­சிய கம்­ப­னி­யொன்­றினால் தயா­ரிக்­கப்­பட்டு சந்­தைப்­ப­டுத்­தப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சியே இவ்­வாறு வெடித்து தீப்­பற்றி எரிந்­துள்­ளது.

அந்தக் கம்­பனி மேற்­படி புதிய ரக கைய­டக்கத் தொலை­பே­சிகள் தீப்­பற்றி எரியும் வாய்ப்­புள்­ளன என எச்­ச­ரித்து அவற்றைப் பயன்­ப­டுத்த வேண்டாம் என பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு அறி­வு­றுத்தி அந்த தொலை­பே­சி­களை மீளப் பெறும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த மாத ஆரம்­பத்தில் அமெரிக்க அதிகாரிகள் அந்த ரக கையடக்கத் தொலைபேசிகளை விமானங்களில் பயன் படுத்துவதற்கு தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வீ.கே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -