எப்.முபாரக்-
தற்போது அரசியல் வாதிகளின் பின்னால் திரிவோர்கள் தான் அதிகமாக சிறை செல்கின்றார்கள் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,வீடமைப்பு,கிராமிய பொருளாதார, காணி ,அமைச்சர் ஆரியவதி கலப்பதி தெரிவித்தார். சிறைக்கைதிகள் தின விழா இன்று திங்கட்கிழமை(12) திருகோணமலை சிறைச்சாலை வளாகத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் பிரசாத் ஹேமந்த தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
தற்போது நாட்டில் நல்லாட்சி நிலவிவருகின்ற நிலையில் நீதிமன்றங்கள் எல்லாம் சுயாதீனமாக இயங்கி வருகின்றது அதனால் தீர்ப்புகள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றது.சிறைக்கைதிகள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர் அனைவரும் நல்லவர்கள் சிறு சிறு குற்றங்கள் புரிந்தவர்கள் சிறைக்கைதிகளும் மனிதர்களே அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்,கடந்த வருடத்தில் நானும் சிறையில் இருந்த பெண்மணியே தற்போது அமைச்சராக இருக்கின்றேன் திருகோணமலை மாவட்டத்தில் என்னால் முடியுமான உதவிகளை மக்களுக்காக செய்து வருகின்றேன் என்றார்.