வீதியில் தூக்கியெறியப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு மாத குழந்தையொன்றை வெல்லவாய பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு எடுத்து வரப்பட்ட போது, அழும் குழந்தைக்கு இதேபோன்ற குழந்தையை உடைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாய்ப்பால் ஊட்டும் சம்பவமொன்று அனைவரினதும் உள்ளத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியும் மனிதாபிமானம் உலகில் உயிர் வாழ்கிறதா என நினைக்கையில் மனிதத்திற்கு பெருமையாக உள்ளது. லஞ்சம் – ஊழல் என பார்க்கப்படும் பொலிஸ் துறையில் இப்படி ஒரு நற் செயலா….. தானும் ஒரு தாய் என்பதை கடமை நேரம் எனப் பாராமல் பசியல் துடித்த பச்சைக் குழந்தைக்கு பால் ஊட்டி அனைவரையும் திகைக்கச் செய்த இவ் உத்தமியான பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு என்ன விருது வழங்கும் இலங்கை அரசு அல்லது பொலிஸ் திணைக்களகம்…?