பல்துறைசார் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் “மனித உரிமை விருது” - ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதி

ல்வி, சுகாதாரம், கலை, ஊடகம் மற்றும் சமூக துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய சமூக சேவையாளர்களுக்கு ‘மக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் அமைப்பின்’ ஏற்பாட்டில் “மனித உரிமை விருது” வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. 

கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன், கௌரவ விருந்தினராக, மேல் மாகாண சபை விவசாய, காணி, நீர்ப்பாசன, சுகாதார அமைச்சர் காமினி திலகசிறி கலந்து கொள்ளவுள்ளதுடன், விசேட அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்னசிங்கம், ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே, மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே. மொஹமட் லாஹிர், ஆர்.எம்.அன்வர், ஹிதாயத் சத்தார், ரிப்கான் பதுயுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த நிகழ்வில் பல்துறை சார்ந்த 87 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -