நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யு.எல்எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் சுகாதார சுதேச மருத்துவப் பிரதியமைச்சர் பைசல் காசிம் அவர்களின் அனுசரணையில் மாபெரும் இலவச வைத்திய முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, உயர் குருதியமுக்கம், கொலஸ்திரோல் ஆஸ்துமா, தோல் வியாதி, வாதம் மற்றும் கண், காது, மூக்கு சிகிச்சை உற்பட நாற்பட்ட நோய்களுக்குமாக முற்றிலும் இலவசமாக இவ்வைத்திய முகாமில் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.
இவ்வைத்திய முகாமானது எதிர்வரும் 19.09.2016 திங்கட்கிழமை மற்றும் 20.09.2016 செவ்வாய்கிகழமை ஆகிய தினங்களில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கொரிய இலங்கை ஆயுர்வேத வைத்திய நிபுணர்கள் இவ்விசேட வைத்திய முகாமில் கலந்து கொண்டு சிகிச்சைகளை வழங்கவுள்ளதுடன் கொரிய நாட்டு வைத்திய நிபுணர்களின் அக்குபஞ்சர் வைத்திய சிகிச்சையும் இடம்பெறவுள்ளது. இதன்போது விசேடமாக முழு உடற்பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வைத்திய முகாமில் பொது மக்கள் அணைவரையும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்பாய் அழைப்பு விடுக்கின்றோம்.
குறிப்பு- மேற்படி சிகிச்சைகளும் அவற்றிற்கான மருந்துகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.