கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை மென்மேலும் பழிவாங்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எழுந்தமாறாக ஏனோதானோவென்று மேற்கொள்ளப்படும் இந்தப் பழிவாங்களினால், அரச அதிகாரிகளும் தமது கடமையை செய்வதற்கு பயப்படுகின்றார்கள். இது நாட்டின் அபிவிருத்திக்கு ஒரு பெரும் பாதிப்பாகும்.
பழிவாங்குவதற்கும் எல்லையொன்று இருக்க வேண்டும். இந்தப் பழிவாங்கல் எப்போது நிறைவடையும் என்று ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.
நான் முதற் தடவையாகவே இவ்வாறான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன் எதற்கும் பொறுமை உண்டு எனவும் மஹிந்த ராஜபக்ஷ சகோதர மொழி தேசிய ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.