நாட்டில் நீதிபதிகள் சுயாதீனமாக செயற்பட முடியாத அளவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பில் வீண் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் இவ்விடயத்தில் சில ஊடகங்களும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாட்டில் மிகவும் மதிக்கப்படும் நீதிபதிகளுள் ஒருவரான ஷிரான் குணரத்னத்தின் தனிப்பட்ட மற்றும் அலுவலக தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், மின்னஞ்சல் ஊடுறுவப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் போராடி வந்திருந்த நிலையில், நீதிபதிகளுக்கு இவ்வாறான அழுத்தங்கள் காணப்படுகின்றமை தமது போராட்டங்களை அர்த்தமற்றதாக்கியுள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, இதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.