எம்.ஜே.எம்.சஜீத்-
மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 16ஆவது வருட நினைவு தினத்தினை முன்னிட்டு தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், விசேட துஆப் பிரார்த்தனையும் எதிர்வரும் (16.09.2016) வெள்ளிக்கிழமை இறக்காமம் மௌலானா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா கலந்துகொண்டு விசேட சொற்பொழிவாற்றவுள்ளார்.
மேலும் இதன்போது உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.