கிழக்கு மாகாணத்தை வடக்குடன் பலவந்தமாக இணைக்க முடியாது. அவ்வாறு இணைப்பதாயின் கிழக்கு மாகாண மக்களின் விருப்பை அறிந்து கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாண மக்கள் வடகிழக்கு இணைப்பை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் அரசியல் சாணக்கிய நாடகத்தை அரகேற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
புறகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.