க.கிஷாந்தன்-
நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி பொகவந்தலாவை கம்பனிக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் 27.09.2016 அன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவை பகுதிக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பொகவந்தலாவை நகரிலும் நோர்வூட் பிரதேச தொழிலாளர்கள் நோர்வூட் நகரிலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“நியாயமான சம்பளத்தை சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்டக் கம்பனிகள் முன்வரவேண்டும்' 'அரசாங்கம் சம்பள பேச்சுவார்த்தையில் தலையிட்டு உடனடியாக தீர்வை பெற்றுத்தர வேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.
இதேவேளை, நோர்வூட் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளிரடம் மகஜரொன்றை கையளித்ததுடன் எதிர்வரும் ஐந்து நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிடின் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சூளுரைத்தனர்.