கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஏறாவூர் முஹம்மது சப்றாஸ்..!

வை.எம்.பைரூஸ்-
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தகப்பிரிவில் முதலாமாண்டில் கற்கும் மாணவனான ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மது சப்றாஸ் நாடளாவிய ரீதியில் நடக்கும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில்நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தங்க பதக்கம் பெற்றார். 

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையில் மூன்று ஆண்டுகளுக்கொரு முறை இடம்பெறும் இவ்விளையாட்டுப் போட்டியானது , (மினி ஒலிம்பிக் என்றும் அழைக்கப்படுகின்றது) அதில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியிலயே ஏறாவூரைச் சேர்ந்த சப்றாஸ் தங்கப்பதக்கம் பெற்று ஏறாவூர் பிரதேசத்துக்கும் முழு கிழக்கு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இவரே ஏறாவூர் பிரதேசத்தில் முதன் முறையில் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே வீரராவார். இறுதிப்போட்டியில் இவர் 8 ஓவர்களை வீசி இரண்டு ஓவர்களில் எது வீத ரன்களுமின்றியும் மற்றும் மொத்தமாக இரண்டு விக்கட்கள் அடங்களாக 21 ஓட்டங்களையும் கொடுத்துள்ளார். இதில் இவருடைய கெட்ரிக் வாய்ப்பும் சற்று நழுவ விடப்பட்டுள்ளது. 

“ஏறாவூரில் பிரபல்யமான விளையாட்டுக் கழகமான YHSC யின் நட்சத்திர வீரரான இவர், கடந்த காலங்களில் மாவட்ட, மாகண ரீதியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 

கிரிக்கட் வரலாற்றில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது திறமைகளை வெளிக்காட்டி வரும் சப்றாஸ் அவர்கள் மென்மேலும் சிறப்புடன் விளையாட வாழ்த்துகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -