மைத்திரி - கோத்தபாயவுக்கு இடையிலான இரகசிய சந்திப்பு..?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கான பல சுற்று பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், கோத்தபாய மேற்கொண்டதாக பல்வேறு ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

மைத்திரி - கோத்தபாயவுக்கு இடையிலான இரகசிய சந்திப்புகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தூதுவராக செயற்பட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதியுடனான இரகசிய சந்திப்புக்கள் எதுவும் நடைபெறவில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என கோத்தபாய மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மிலிந்த மொரகொட ஊடாக ஜனாதிபதியுடன் எந்தவிதமான சந்திப்புக்களை மேற்கொள்ளவில்லை.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடக நிறுவன பிரதானியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் அளித்துள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -