திருமணம் செய்ய பெண்கள் இல்லாத கிராமம் - பிரம்மச்சாரியாக வாழும் ஆண்கள்

சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பல ஆண்கள் தங்களுடைய வாழ்க்கையை பிரம்மசாரிகளாகவே தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த லாவ்யா கிராமம் உள்ளூரில் ‘பிரம்மசாரி கிரமம்‘ என்று அறியப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1600 பேர் வாழ்கின்ற அந்த கிராமத்தில் 30 முதல் 55 வயது வரையானோரில் 112 பேர் திருமணமாகாமல் பிரம்மசாரி வாழ்க்கை வாழ்வதாக பதிவு செய்துள்ளனர். இது வழக்கத்திற்கு மாறான மிக உயர்ந்த பதிவாகும்.

இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கின்ற 100 –க்கும் அதிகமான உள்ளூர் ஆடவர்களை அறிந்து வைத்திருப்பதாக சியோங் தெரிவிக்கிறார். “நான் எனக்கொரு மனைவியை தேடிகொள்ள முடியவில்லை. பெண்கள் வேலைக்காக இடம்பெயர்ந்து வேறு எங்காவது சென்றுவிடுகிறார்கள். பின்னர் நான் திருமணம் செய்ய யாரையாவது எவ்வாறு கண்டுபிடிப்பது?” என்று அவர் ஆதங்கப்படுகிறார்.

இந்த கிராமத்தில் ஆண்கள் பலர் பிரம்மசாரியாக வாழ்வதற்கான ஆதார அடிப்படையை நோக்கினால், பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் ஒன்று சீனாவில் காணப்படும் ஆண்-பெண் சமசீரின்மை.

சீனாவில் பெண்களை விட ஆண்களே அதிகம். 100 பெண்களுக்கு 115 ஆண்கள் இப்போது உள்ளனர். வரலாற்றுப்பூர்வமாகவே பெண்களுக்கு மேலாக ஆண்களுக்கு அதிக ஆதரவு அளிக்கும் கலாசாரம் சீனாவுடையது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த “ஒரு குழந்தை கொள்கை” திட்டமானது, கட்டாய கருச்சிதைவு மற்றும் 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கிவிட்டது.

அதன் விளைவால்தான் 21 ஆம் நூற்றாண்டில் சீனாவிலுள்ள ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பதற்கு நெருக்கடி ஏற்படலாயிற்று. லாவ்யா கிராமம் மிகவும் தொலைவில் உள்ளது போலவும், சில வேளைகளில் துண்டிக்கப்பட்டு போயிருப்பது போலவும் உணரப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட சியோங்கின் வீட்டை பார்க்க வரும் பெண்கள் அவரது மனைவியாகி அங்கு தங்குவதை கருத்தில் கொள்ளக் கூடிய அளவில் அந்த வீடு போதுமானதாக இல்லை. இது மட்டுமே ஒரேயொரு பிரம்மசாரி நகரம் என்பது அல்ல. வறுமையிலிருந்து தப்புவது, நிலத்தோடு ஒன்றி வாழ்வது, பாலின விகிதாசார சமத்துவமின்மை, வயதான உறவினருக்கு ஆற்ற வேண்டிய கடமை ஆகியவற்றால், கிராமப்புற சீனாவின் வாழ்க்கையில் இருக்கும் குழப்பத்தை இந்த கிராமம் காட்டுகிறது என்றே சொல்ல வேண்டும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -