சிகையலங்கார நிலைய ஊழியர் பொலிஸ் அதிகாரியால் தாக்குதல் - அட்டனில் போராட்டம்

க.கிஷாந்தன்-
லையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸார்களால் அரங்கேற்றப்படும் அடிதடி அராஜகத்தை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்க்கு அஞ்சப்படும் சூழ்நிலையை மீண்டும் இந்நாட்டில் அரங்கேற்ற இடம் கொடுக்க வேண்டாமென மத்தய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

அட்டன் நகரில் 23.09.2016 அன்று மாலை சிகையலங்கார நிலைய ஊழியர் ஒருவர் அட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்து அட்டன நகரில் 24.09.2016 அன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அன்று புஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்தில் தோட்டப்பகுதி தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு தூக்கிட்டு உயிரிழந்ந சம்பவம் மனதில் இருந்து அகன்று செல்வதற்க்கு முன் அட்டனில் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வேளையில் இவ்விரு சம்பவங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதோடு நடந்தேறிய தாக்குதல் சம்பவத்துக்கு உரித்தான அதிகாரிக்கெதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென இதன் போது அவர் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -