கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பெயரை மாற்றம் செய்ய தீர்மானம்

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பெயரை ஜனநாயக சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியம் என்று மாற்றம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியத்தின் விசேட புனரமைப்பு கூட்டம் அதன் ஸ்தாபகத் தலைவர் இப்ரான்சா பௌமி தலைமையில் திங்கட்கிழமை இரவு அக்கரைப்பற்றில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர். சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் தலைவராகவும் இப்ரான்சா பௌமி பொதுச் செயலாளராகவும் அஸ்லம் மௌலானா நிர்வாகச் செயலாளராகவும் சலீம் றமீஸ் பொருளாளராகவும் எம்.எப்.றிபாஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் கலாநிதி ஏ.எம்.ஜெஸீல், எஸ்.எல்.மன்சூர், ஏ.ஜீ.ஏ.கபூர் ஆகியோர் உப தலைவர்களாகவும் றபீக் பிர்தௌஸ் ஊடக இணைப்பாளராகவும் பீ.எம்.கே.ரஹ்மத்துல்லாஹ் கணக்காய்வாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது நடைமுறையிலுள்ள அமைப்பின் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டதுடன் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -