மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சகோதரிகளான இவர்கள் யானை தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி 11 வயதுடைய சிறுமி உயிரிழந்தார். 9 வயதுடைய தங்கை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.