திருகோணமலை கந்தளாய் பேராற்றுவெளி பாலத்தினை புனரமைக்குமாறு கோரிக்கை..!

எப்.முபாரக்-
ந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் பேராற்றுவெளி பாலம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாது குன்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதாகவும், அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலும் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பிரதேச மக்களின நீண்ட காலக் கணவாக காணப்படுகின்ற பேராற்றுவெளி பாலம் மிக நீண்டகாலத்தின் பின்னர் புதிய வடிவமைப்புடன் கட்டப்பட இருந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பேராற்றுவெளி பிரதேசம் மூவினமக்களும் செரிந்து வாழுகின்ற ஒரு விவசாய நிலப்பிரதேசம் கந்தளாய் குளத்தினுடைய பிரதான வாய்க்கால் இப்பேராற்றுவெளியினூடாகவேசெல்லுகின்றது. குறிப்பிட்ட பாலத்தினால் ஒவ்வெறு நாளும்ஆயிரக்கணக்கான பாதசாரிகளும் துவிச்சக்கர வண்டிகளும் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் செல்லுகின்றன.பாடசாலை மாணவர்கள், ஜனாஸாக்கள் மற்றும் மூவின மக்களின் போக்குவரத்துக்காகவும் இப்பாலம் உதவியது.சேதமடைந்திருக்கும் இப்பாலத்தின் கட்டுமான பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உச்ச தொகையான 20 இலட்சம்ரூபாவினை இவ் 20 மீட்டர்பாலத்திற்கு இந்த வருடம்ஒதுக்கியிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்பட்த்தப்பட்ட நிதியின் வேலைத்திட்டங்கள் அமுலாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் இப்பாலத்திற்கான கேள்வி மனுகந்தளாய் பிரதேச செயலகத்தினால் இன்னும் கோரப்படாமல் இருப்பதும்மாவட்ட செயலகம் பராமுகமாக இருப்பது ஏன் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் கவனயீனம் மக்களின் அபிவிருத்திக்கு தடையாகஇருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கினறனர். எனவே இந்நல்லாட்சியிலாவது விரைவில் இப்பாலத்தினை புனரமைத்து மக்களின் பாவனைக்கு விடுமாறும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -