நுரைச்சோலை மற்றும் இதர பிரதேசங்களில் கரும்பு செய்கை பண்ணாமல் இருக்கின்ற காணிகளை மீள கரும்பு செய்கை பண்ணுவதற்காக தர வேண்டுமென பெரும்பான்மை இன மக்களை தூண்டி அந்த ஆர்பாட்டம் இடம் பெற்றது
உண்மையிலே இந்த மாவட்டத்தில் இவர் அதிக விருப்பு வாக்குகளுடன் தெரிவாக எத்தனை முஸ்லீம் வாக்காளர்கள் வாக்களித்தார்கள்
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஏஜன்டுகளை உருவாக்கி முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதி துவத்தை இல்லாமல் செய்து இந்த வேலைத்திட்டத்தை அரங்கேற்றினர்கள்
இன்று எமது மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்சினையான நுரைச்சோலை நெற்பயிர் செய்கை நிலத்தை மீட்க அவர்கள் பல போராட்ட ங்களை முன்னெடுக்கும் தருவாயில் இவ்வாறானதொரு எமது சமுகத்திற்கெதிரான அவரின் செயற்பாடு தொடர்பில் சிந்திக்கவும் அதற்கெதிராக செயற்படவும்
நாம் தயாராக வேண்டும்
இவ்வாறான சூழலில் எம்மிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களுக்கு மாற்றீடாக வழங்கப்பட்ட காணிகளேயே நாங்கள் விவசாயம் நெல்பயிர வேண்டுகிறோம்
தவிர கரும்பு காணிகளிலல்ல என நுரைச்சோலை விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் கரும்பு தொழிற்சாலைக்கு ஆதரவாக பின் புலத்தில் நின்று அம்பாரை அமைச்சர் செயற்படுவது மிகவும் மன வருந்ததக்க விடயமாகும்
இவரின் இவ்வாறான செயற்பாடுகள் நல்லாட்சி அரசின் போக்குக்கு உகந்ததல்ல
என நாட்டின் ஜனாதிபதி யை தெளிவூட்ட வேண்டும்
சொந்த நிலத்தில் நாம் ஆண்டாண்டு காலமாக செய்து வந்த விவசாயத்தை மாற்றி அமைக்க கோருவதில் எந்த விதமான நியாயங்களும் தென்பட வில்லை.
எமது நிலங்களை பேரினவாத முதலாளித்துவ அரசியல் வாதிகளிடம் இருந்து காப்பதே இன்றைய தேவை
அஸ்மி ஏ கபூர்
முன்னாள மாநகரசபை உறுப்பினர்
அக்கரைப்பற்று