தெல்தோட்டை குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் வழங்கி வைக்கும் நிகழ்வு..!

இக்பால் அலி-
னிதனுடைய அன்றாட வாழ்க்கைக்கு தண்ணீரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மாவனல்லையிலுள்ள தெல்கஹகொட பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த தண்ணீர்ப் பிரச்சினையை அனுபவித்த மக்களுக்கு நன்கு தெரியும் இந்த தண்ணீரின் முக்கியத்துவத்தின் சிறப்பம்சம். நாங்கள் எந்த தேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானலும் எங்களுக்கிடையே ஒற்றுமை அவசியமாகும். அப்போதுதான் தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெறுபேற்றின் சிறப்புக்களை அனுபவிக்கலாம். தற்போது எம் சமூகத்திற்கு மத்தியில் மிகப் பெரும் குறைபாடாக இருப்பது ஒற்றுமையின்மையே. எனினும். எமது தேவைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவத்திற்கும் போதுமானதாக இருப்பது ஒற்றுமையான செயற்பாடே ஆகும் என்று தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முபஷ்ஷீர் சாதிக் தெரிவித்தார்.

அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் டுபாய் நாட்டைச் சேர்ந்த அஹமட் கலப் இஸ்மாயீல் அவர்களின் அனுசரணையுடன் தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முபஷ்ஷீர் சாதீக்கின் ஏற்பாட்டில் சுமார் 6 இலட்சம் 50 ஆயிரம் ரூபா செலவில் 75 குடும்பங்களுக்கான சுத்தமான குடிநீர் விநியோகம் வழங்கி வைக்கும் நிகழ்வு தெல்கஹகொட ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் தலைமையில் 02-09-2016 நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முபஷ்ஷீர் சாதிக் நீர் விநியோத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:

இந்த ஊர் மக்கள் மிக நீண்ட காலமாக தண்ணீர் இன்றி கஷ்டப்படுகின்றார்கள். நினையாப் பொறுத்தளவில் டுபாய் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் எமது நீரைப் பெற்றுக் கொள்வதற்காக உதவி செய்ய முன்வந்திருக்கின்றார். இந்தத் தருணத்தில் எமது ஊர் மக்கள் யாவரும் நன்மை அடைய வேண்டும் என்பதற்காக தம் இடத்தில் காணித் துண்டைக் கொடுத்து நீர் விநியோகத் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக இலவசமாக இடத்தைத் தந்துதவிய சகோதரர் இப்போது எம்மோடு இல்லை. அவரை நாம் மறக்க முடியாது. அவருக்காக இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அனவைரும் பிரார்த்தனைகள் புரிய வேண்டும்.

எங்களாலான முடிந்த உதவிகளைச் செய்வது நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவே தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அமைச்சரின் அலுவலகத்தில் உங்களுடைய முறைப்பாடுகளை தெரிவியுங்கள். எங்களால் இயன்ற உதவிகளைச் செய்கின்றோம். 

நாம் எதையும் கேட்டுத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். முயற்சியற்று சும்மா இருப்பதனால் எமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. தெல்கஹகொடை பள்ளிவாசலின் முயற்சியினால் இந்த தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதற்காக பிரத்தியோகமான தண்ணீh இரைக்கும் மோட்டா இயந்திரம் பெற்று தந்த சகோதரர் இதற்காக பங்களிப்பு அனைத்து சகோதரர்களுக்கும் இந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் கபீர் ஹாசிமின் இணைப்பாளர்களான முனீர், ரிபாய், ரிஸ்வி, ஆசிரியர் நிலாப்தீன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -