ஒலுவில் பிரதேச கடலரிப்பு தொடர்பில் ஆராந்து நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சர் களத்தில்

பைஷல் இஸ்மாயில்,சப்னி அஹமட்-

லுவில் பிரதேச கடலரிப்பினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளையும், தடைகளையும் சரியாக ஆராய்ந்து தகவல் திரட்டுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் எதிர்வரும் 09,10 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பற்றிய விரிவான தகவல் திரட்டல் மற்றும் தீர்வு வழங்கும் நோக்கில் வரவுள்ள உயர் அதிகாரிகளுக்கு வழங்கவுள்ள தகவல் பற்றிய கலந்துரையாடல் இன்று (03) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அண்மைக்காலமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக துறைமுக அதிகார சபையின் உயர்மட்டக்குழு எதிர்வரும் 09,10ஆம் திகதிகளில் வரவிருக்கின்றனர். இவர்கள் களத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளுக்கான மேற்கொள்ளவுள்ளனர் ஆகவே அதற்கான ஆவணங்களை தயார்படுத்துமாரும் கேட்டுக்கொண்டார்.

இதன் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிச்செயலாளர் அதிசயராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -