பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்-
கிழக்கு மாகாண சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்புக்களையும் நல்குமாறு கியுபா நாட்டுத் தூதுவர் லோரென்டினோ பெடிஸ்டாவுக்கும் வலியுறுத்தியு கூறியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் இன்று (06) தெரிவித்தார்.
கியுபா நாட்டுத் தூதுவர் லோரென்டினோ பெடிஸ்டாவுக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (05) கொழும்பிலுள்ள கியுபா நாட்டுத் தூதுவரகத்தில் இடம்பெற்றபோது இதனை வலியுறுத்தி பேசியதாகவும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் உள்ள வைத்திய, சுகாதார சேவைகளை விஷ்தரிப்பதற்கான விசேட தேவைகளை பூர்த்தி செய்ய தாங்களின் ஒத்துழைப்புக்களை மேற்கொள்ளுமாறும் வெளிநாட்டு உதவிகள் மூலம் அதிகப்படியான புதிய தொழிநுட்பத்துடன் சுகாதார சேவையை வளர்ச்சி செய்ய வேண்டியுள்ளதால் அதற்கான சகல உதவிகளையும் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காணப்பட்டதால் நல்லாசி அரசின் மூலம் அதிகபடியான உதவிகளை கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது மாத்திரம் இன்றி வெளிநாட்டு உதவிகளை மேலும் பெறுவதன் மூலம் சுகாதார, சுதேசத்தில் பாரிய வளர்ச்சியை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனை கியுபா நாட்டுத் தூதுவர் ஏற்றுக்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களுக்குமான விஜயத்தை மிக விரைவில் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகளை நேரில் சென்று ஆராயவுள்ளதாக தூதுவர் தெரிவித்தாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மேலும் கூறினார்.